ஏழை தாய் சேயின் உயிர்!

தர்மபுரி மாவட்டம், செங்கோடியை சேர்ந்தவர் காந்தி. இவர் மனைவி ஜோதி நேற்று அதிகாலை திடீரென்று பிரசவ வலி அதிகமாக ஏற்பட்டது.
தருமபுரி அரசு மருத்துவகல்லூரி மருத்துவமனைக்கு அழைத்து வந்தார். அப்போது ஜோதிக்கு பெண் குழந்தை இறந்த நிலையில் பிறந்தது. சற்று நேரத்தில் ரத்தப்போக்கு ஏற்பட்டு எதிர்பாராத விதமாக ஜோதியும் பரிதாபமாக உயிரிழந்தார். ஜோதி மற்றும் வயிற்றிலேயே இறந்து பிறந்த பெண் குழந்தையின் உடல்களை பார்த்து அதிர்ச்சி அடைந்த காந்தி கதறி அழுதார். இது குறித்து காவல் நிலையத்தின் கணவர் புகார் அளித்தார். அதில், எனது மனைவிக்கு மருத்துவர்கள் சரியான முறையில் சிகிச்சை அளிக்காததாலும், அவர்களின் அலட்சியதாலும் தான், எனது மனைவி மற்றும் குழந்தையின் இறப்புக்கு காரணம் கூறியிருந்தார். அவர் அளித்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
@ ஏழை தாய் சேயின் உயிர்!