ஐபோனுக்கு டிஸ்ப்ளே தயாரித்து வழங்கும் எல்ஜி

எல்ஜி டிஸ்ப்ளேவில் 270 கோடி அமெரிக்க டாலர்களை ஆப்பிள் நிறுவனம் முதலீடு செய்ய இருப்பதாக கடந்த ஆண்டு ஜூலை மாத வாக்கில் தகவல் வெளியானது. எதிர்கால ஐபோன்களுக்கான OLED பேனல்களை வாங்க ஆப்பிள் முடிவு செய்திருப்பதாக கூறப்பட்டது.
தற்சமயம் வெளியாகி இருக்கும் தகவல்களின் படி ஆப்பிள் நிறுவனத்துக்கு OLED பேனல்களை வழங்கும் இரண்டாவது நிறுவனமாக எல்ஜி மாறயிருப்பதாக கூறப்படுகிறது. இதனால் ஆப்பிள் நிறுவனம் தனது டிஸ்ப்ளேக்களுக்கு சாம்சங்-ஐ மட்டும் நம்ப வேண்டிய நிலையை மாற்றும்.
முன்னதாக ஆப்பிள் நிறுவனத்தின் 6.5 இன்ச் ஐபோன் X பிளஸ் மாடலுக்கு எல்ஜி நிறுவனம் டிஸ்ப்ளே வழங்கலாம் என தகவல் வெளியானது. சமீபத்தில் கிடைத்திருக்கும் தகவல்களின் படி எல்ஜி டிஸ்ப்ளே சுமார் 20 லட்சம் முதல் 40 லட்சம் யூனிட்களை வழங்கலாம் என கூறப்படுகிறது.
                                              
ஏப்ரல் மாத வாக்கில் தி வால் ஸ்ட்ரீட் ஜர்னல் வெளியிட்ட தகவல்களில் பிரம்மான்ட உற்பத்தியில் சவால் ஏற்பட்டதால் ஆப்பிள் நிறுவனத்துக்கு சொன்னபடி டிஸ்ப்ளே வழங்க முடியாத நிலை ஏற்பட்டது. இதனால் சாம்சங் போன்று எல்ஜி டிஸ்ப்ளே நிறுவனத்தால் அதிகளவு டிஸ்ப்ளேக்களை வழங்க முடியுமா என்ற நிலைக்கு ஆப்பிள் தள்ளப்பட்டது.
இதைத் தொடர்ந்து வணிக நிறுவனம் வெளியிட்ட தகவல்களில் எல்ஜி நிறுவனத்தால் 2018 ஐபோன் மாடல்களுக்கு தேவையான 20% OLED பேனல்களை வழங்க முடியும் என தெரிவித்திருந்தது.
2018 செப்டம்பரில் ஆப்பிள் நிறுவனம் மூன்று ஐபோன்களை வழங்க இருப்பதாகவே இதுவரை வெளியாகி இருக்கும் தகவல்களில் தெரிவிக்கப்பட்டிருக்கிறது. அதன்படி இரண்டாம் தலைமுறை ஐபோன் X, விலை குறைந்த 6.1 இன்ச் எல்சிடி டிஸ்ப்ளே கொண்ட ஐபோன் மற்றும் ஐபோன் X பிளஸ் மாடல்களை வெளியிட இருப்பதாக கூறப்படுகிறது.

Leave a comment

Your email address will not be published.