ஐரோப்பிய யூனியனைப் பிளவுபடுத்தும் எண்ணம் ரஷ்யாவுக்கு என்றுமே இருந்ததில்லை என்று அந்நாட்டு அதிபர் விளாடிமிர் புதின் தெரிவித்துள்ளார்.
ஐரோப்பிய யூனியன் நாடுகளில் ஒன்றான ஆஸ்திரியாவுக்கு அரசுமுறைப் பயணமாக ரஷ்ய அதிபர் புதின் இன்று செல்லவுள்ளார். இதனை முன்னிட்டு, ரஷ்யத் தலைநகர் மாஸ்கோவில் செய்தியாளர்களிடம் நேற்று அவர் கூறியதாவது:

ஒன்றுபட்ட ஐரோப்பிய யூனியனையே ரஷ்யா விரும்பு கிறது. ரஷ்யாவுக்கு ஐரோப்பியன் யூனியன் சிறந்த பொருளாதார மற்றும் வர்த்தகக் கூட்டாளியாக விளங்குகிறது. எனவே, ஐரோப்பிய யூனியனைப் பிளவுபடுத்தும் எண்ணம் ரஷ்யாவுக்கு என்றுமே இருந்ததில்லை.
இவ்வாறு விளாடிமிர் புதின் கூறினார்.