ஒரு எலெக்ட்ரோன் எவ்வளவு காலம் வாழும் என்று உங்களுக்குத் தெரியுமா? அதன் வாழ்வு காலத்தைச் சமீபத்தில் கணித்துள்ளனர். 66,000 yotta வருடங்கள் ஒரு எலெக்ட்ரோன் அழியாமல் இருக்கும். அது எவ்வளவு தெரியுமா? இன்றுள்ள பேரண்டத்தின் ஆயுட்காலத்தைப்போல (13.8 பில்லியன் வருடங்கள்) 5 000 000 000 000 000 000 000 000 000 000 மடங்குகள் அதிகம். இதை 5 quintillion என்பார்கள். இப்படிப் பார்த்தால், ஒரு எலெக்ட்ரோன் என்றுமே அழியாது போலத்தான் தெரிகிறது.
* Yotta என்பதுதான் மெட்ரிக் அளவீடுகளில் மிகவும் பெரிய அலகு. இது 1 உடன் 24 பூச்சியங்களைக் கொண்ட மெட்ரிக் அலகு. அதாவது, 1 000 000 000 000 000 000 000 000.🌐