ஒரு நாட்டையே உலுக்கிய சம்பவம்!

ஒரு நாட்டையே உலுக்கிய சம்பவம்! வீதிகளில் வீசியும் பாலங்களிலும் தொங்க விடப்பட்ட சடலங்கள்!

மெக்சிக்கோ உருபான் நகரின் மூன்று இடங்களில் உயிரிழந்தவர்களின் 19 உடல்களை பொலிஸார் மீட்டுள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

அத்துடன் சில உடல்கள் பாலத்தின் மேல் தொங்கவிடப்பட்டிருந்த நிலையிலும் அதிகாரிகளால் மீட்கப்பட்டுள்ளன எனவும் அந்த ஊடகங்கள் தகவல் வெளியிட்டுள்ளன.

இது தொடர்பில் சர்வதேச ஊடகங்கள் வெளியிட்டிருப்பதாவது,

இரண்டு போதைப் பொருள் கடத்தல் கும்பல்களிற்கு இடையில் ஏற்பட்ட மோதல் காரணமாக கொல்லப்பட்டவர்களின் உடல்களே இவ்வாறு போடப்பட்டுள்ளன என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இவ்வாறு உயிரிழந்தவர்களின் பல உடல்கள் நகரில் உள்ள பாலத்தில் தொங்கவிடப்பட்டுள்ளதை காண்பிக்கும் படங்கள் சமூக ஊடகங்களிலும் வெளியாகியுள்ளன.

மேலும் உறுப்புக்கள் துண்டிக்கப்பட்ட நிலையில் வீதிகளில் கைவிடப்பட்ட உடல்களை காண்பிக்கும் படங்களும் வெளியாகியுள்ளன.

இவ்வாறு போடப்பட்டிருந்த உடல்களிற்கு அருகில் எச்சரிக்கை செய்திகளையும் காணமுடிந்தது என அந்நாட்டு ஊடகங்கள் வெளியிட்டுள்ளன. மேலும் ஜலிஸ்கோ புதிய தலைமுறை என்ற அமைப்பு இதற்கு உரிமை கோரியுள்ளது.

அந்நாட்டில் பல குற்றவாளிக் கும்பல்கள் மத்தியில் மோதல்கள் இடம்பெறுகின்றன. போதைப் பொருளை உற்பத்தி செய்து விநியோகம் செய்வதற்கான பகுதிகளை தங்கள் கட்டுப்பாட்டின் கீழ் வைத்திருப்பதற்கான மோதலே இதுவெனவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.