லிமா: பெரு தலைநகர் லிமாவில் 27 கடல் ஆமைகளை மீண்டும் கடலில் கொண்டு போய் விடுவதற்காக அட்டைப் பெட்டிகளில் அடைத்து கொண்டு அதிகாரிகள் சென்றனர். ஓராண்டுக்கு முன்பு காயம் அடைந்த நிலையிலும் நோயுற்ற நிலையில் கடத்தல் காரர்களிடமிருந்து மீட்டு வரப்பட்ட இந்த கடல் ஆமைகள் சிகிச்சை மற்றும் பராமரிப்புக்குப் பின்னர் மீண்டும் கடலுக்குக் கொண்டு செல்லப்பட்டன. மீட்கப்பட்ட 29 ஆமைகளில் இரண்டு ஆமைகள் நோய் காரணமாக இறந்துவிட்டதாக கூறப்படுகிறது.
இந்த வகை ஆமைகள் வழக்கமாக நூறு ஆண்டுகள் வரை உயிர் வாழும் என கூறப்படுகிறது. மேலும் அந்த ஆமைகள் அனைத்தும் கடலில் விடப்படும் என தெரிவித்தனர்.
Costa RH, et al buy cialis online reviews