கடந்த வெள்ளியன்று, நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், பொருளாதார சிக்கல்களை தீர்க்கும் வகையிலான பல்வேறு அறிவிப்புகளை வெளியிட்டார்.

கடந்த வெள்ளியன்று, நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், பொருளாதார சிக்கல்களை தீர்க்கும் வகையிலான பல்வேறு அறிவிப்புகளை வெளியிட்டார்.குறிப்பாக, அன்னிய முதலீட்டாளர்கள் வருமானம் மீதான கூடுதல் வரியை திரும்ப பெறுவது, ஜி.எஸ்.டி.,யை எளிமையாக்குவது உள்ளிட்ட பல்வேறு அறிவிப்புகளை வெளியிட்டார்.இதையடுத்து, இந்த அறிவிப்புகளால், நேற்று பங்குச் சந்தைகள் உயர்வை கண்டன. சென்செக்ஸ், 793 புள்ளிகள் அதிகரித்தது. நிப்டி, 229 புள்ளிகள் அதிகரித்தது. நேற்று,1,705 பங்குகள் முன்னேற்றத்தையும், 811 பங்குகள் பின்னடைவையும், 123 பங்குகள் மாற்றமின்மையையும் சந்தித்தன. டாடா ஸ்டீல், சன்பார்மா, ஹீரோ மோட்டோகார்ப், வேதாந்தா, ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ், டாடா மோட்டார்ஸ், மாருதி சுசூகி, பஜாஜ் ஆட்டோ ஆகிய நிறுவன பங்குகள், 2.01 சதவீதம் வரையிலான சரிவை கண்டன.🌐