இங்கிலாந்து நாட்டிலுள்ள க்ளாஸ்கோ பல்கலைகழகத்தின் சார்பில் சிறந்த கல்வி பணி மற்றும் சமூக பணி ஆற்றியதற்காக எம்.ஜி.ஆர் பல்கலைக்கழக நிறுவனர் மற்றும் வேந்தர் ஏ.சி.சண்முகத்திற்கு கவுரவ டாக்டர் பட்டம் வழங்கப்பட்டது.
இதையடுத்து சென்னை ராயல் கிளப் சார்பில் பாராட்டுவிழா நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் வி.ஐ.டி. பல்கலை வேந்தர் விஸ்வநாதன், ஏவிஎம் சரவணன், நடிகர் ரஜினிகாந்த் உள்ளிட்டோர் பலர் பங்கேற்றனர்.
இந்நிகழ்ச்சியில் பேசிய நடிகர் ரஜினிகாந்த், வாழ்வில் என்னதான் ஒருவர் கடினமாக உழைத்தாலும் கடவுளின் அருள் இருந்தால் மட்டுமே முன்னேற முடியும் என்று தெரிவித்தார். ஏ.சி.சண்முகத்தின் உழைப்பு தன்னை மிகவும் கவர்ந்த ஒன்று என்றும் அப்போது அவர் குறிப்பிட்டார்.