கடும் கோபம் அடைந்துள்ள, பாகிஸ்தான் பயங்கரவாதிகள்,

ஜம்மு – காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்டுள்ளதால், கடும் கோபம் அடைந்துள்ள, பாகிஸ்தான் பயங்கரவாதிகள், புல்வாமாவில் நடத்தியது போன்ற பயங்கர தாக்குதலை, நாட்டின் பிற மாநிலங்களில் நடத்தி, வீரர்களை கொல்ல திட்டமிட்டுள்ளதாக, உளவுத் தகவல்கள் தெரிவிக்கின்றன. இதையடுத்து, நாட்டின் பல நகரங்களில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. டில்லி, ராஜஸ்தான், பஞ்சாப், குஜராத், மஹாராஷ்டிரா, கர்நாடகா, ஆந்திரா மாநிலங்களில், பயங்கரவாதிகள் நடத்த உள்ளதாக, உளவுத் தகவல்கள் தெரிவிக்கின்றன. இதையடுத்து, அந்த மாநிலங்களில், பலத்த பாதுகாப்பு மற்றும் கண்காணிப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.🌐