பாண்டிராஜ் இயக்கத்தில் கார்த்தி நடித்து வெளியான படம் `கடைக்குட்டி சிங்கம். இப்படம் ஃபேமிலி ஆடியன்ஸிடம் பெரிய வரவேற்பைப் பெற்றுள்ளது. சத்யராஜ், ப்ரியா பவானி சங்கர், அர்த்தனா பினு, சயிஷா, சூரி எனப் பலரும் இப்படத்தில் நடித்திருக்கிறார்கள். இதன் தெலுங்கு டப்பிங் `சின்னபாபு’ என்ற பெயரில் வெளியானது.
அந்த தெலுங்குப் பதிப்பைப் பார்த்து குடியரசுத் துணைத் தலைவர் வெங்கைய நாயுடு ட்விட்டரில் தனது பாராட்டுகளைத் தெரிவித்திருக்கிறார். “சமீபத்தில் தெலுங்கு மொழியில் வெளியான “சின்னபாபு” (தமிழில் “கடைக்குட்டி சிங்கம்”) திரைப்படத்தைப் பார்த்தேன். கிராமத்து பசுமை பின்னணியில், நம் பழக்க வழக்கங்களை, மரபுகளை மற்றும் வாழ்க்கை முறையை, ஆபாசம் இல்லாமல் காட்டிய சுவாரசியமான நல்ல படம்” என்று தெரிவித்திருந்தார்.
இதற்கு நன்றி தெரிவிக்கும் விதமாக இப்படத்தின் தயாரிப்பாளரான நடிகர் சூர்யா ” நாட்டு மக்களின் பெருமதிப்புக்குரிய தாங்கள்,எங்களின் படைப்பான ‘கடைக்குட்டி சிங்கம்’ திரைப்படத்தைப் பார்த்து மனம்திறந்து பாராட்டியது,எங்களுக்கு மிகுந்த ஊக்கத்தையும் உற்சாகத்தையும் அளிக்கிறது.படக்குழுவினர் அனைவரின் சார்பாகவும்,தங்களுக்கு மனப்பூர்வமான நன்றிகள்.” என ரீட்வீட் செய்திருந்தார்.
1 comment