கட்டங்களை இடிப்பதற்கான நடவடிக்கைகள் துவங்கியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளன

கேரளாவிலுள்ள கொச்சியின் மராடு பகுதியில், விதிமுறைகளை மீறி கட்டப்பட்ட கட்டடங்களை இடிக்க உத்தரவிட்ட கெடு முடிந்ததையடுத்து இன்று இடிப்பதற்கான ஏற்பாடு துவங்கும் என தகவல் வெளியாகியுள்ளது. கேரளாவில், கொச்சியின் மராடு பகுதியில், கடலோர கட்டுப்பாடு மண்டல விதிமுறைகளை மீறி, 343 அடுக்குமாடி கட்டடங்கள் கட்டப்பட்டுள்ளன. ‘இந்தக் கட்டடங்களை இடிக்க வேண்டும்’ என, உச்ச நீதிமன்றம் கடந்த மே 8ல் தீர்ப்பளித்தது.தீர்ப்பை மறுஆய்வு செய்யக் கோரி தாக்கல் செய்யப்பட்ட மனுக்களை கடந்த செப்.8-ம் தேதி விசாரித்த உச்ச நீதிமன்றம், ‘கட்டடங்களை இடித்து தரைமட்டமாக்கியது தொடர்பான அறிக்கையை, செப்.20ம் தேதிக்குள் தாக்கல் செய்ய வேண்டும்.’ என உத்தரவு. இந்நிலையில் சுப்ரீம் கோர்ட் விதித்த கெடு முடிந்ததையடுத்து, இன்று கட்டங்களை இடிப்பதற்கான நடவடிக்கைகள் துவங்கியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளன