கணவர் மற்றும் குடும்பத்தினர் கொடுமை படுத்துவதாக ஸ்கேட்டிங் சேம்பியன் புகார்

ஐதராபாத்
தேசிய ஸ்கேட்டிங் சாம்பியன் ருச்சிகா ஜெயின்  வெள்ளிக்கிழமை பேகும்பேட் பெண்கள் போலீஸ் நிலையத்தில் அவரது கணவர் அக்‌ஷய் கதிரியாவுக்கு எதிரான தொந்தரவு மற்றும் அச்சுறுத்தல்கள் குறித்து புகார் அளித்துள்ளார்.
ருச்சிகா ஜெயின் ஸ்கேட்டிங் போட்டிகளில் தங்க பதக்கம் வென்று உள்ளார் மற்றும் பல தேசிய போட்டிகளில் பட்டம் வென்று உள்ளார். அவர் தனது புகாரில்  அவரது கணவர் மற்றும் அவரது குடும்பத்தினர் அவரை தொந்தரவு செய்து அச்சுறுத்தி வருவதாக கூறி உள்ளார்.
கடந்த ஆண்டு டிசம்பர் 11 ம் தேதி திருமணத்திற்குப் பின் தொந்தரவு தொடங்கியது என்றும் அவரது கணவர்  தேனிலவுக்கு அழைத்து செல்லவில்லை எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
மேலும் அவர் கூறியதாவது:-
திருமணத்திற்கு பிறகு அக்‌ஷய் என்னைத் தவிர்க்க தொடங்கினார். அவர் காலை 11 மணியளவில் வீட்டைவிட்டு வெளியேறி அடுத்த நாள் அதிகாலையில் திரும்பி வருகிறார். நான் அவரது மொபைல் போனை சோதித்தேன் மற்றும் அவர் வாட்ஸ் அப்பில்  ஒரு பெண் தொடர்ந்து அவருடன்  பேசிவருவது  கண்டுபிடிக்கப்பட்டது.
தனது கணவர் விவகாரம் குறித்து குடும்பத்தாரிடம் தெரிவித்த போது  அவர்களும் தன்னை கொடுமை படுத்த தொடங்கினர்.”என் கணவர் மற்றும் மாமியார் என்னை  மன, உடல், உணர்ச்சி மற்றும் உளவியல் கொடுமைக்கு உட்படுத்தினர். அவரது முழுக்குடும்பமே என்னை அச்சுறுத்தியது.
ருச்சிகா ஜெயின் புகாரைத் தொடர்ந்து, இந்திய தண்டனைச் சட்டத்தின் கீழ் 498A, 506 மற்றும் 406 பிரிவுகளில் போலீசார்  வழக்கு பதிவு செய்தனர்.

Leave a comment

Your email address will not be published.