கன்னியாகுமரி மாவட்டத்தில், தொடர்ந்து பெய்து வரும் மழையால், சுங்கான்கடை மலையில் இருந்து, பாறை உருண்டு விழுந்தது. குமரியில், நேற்று முன்தினம் இரவு முதல், நேற்று காலை, 10:00 மணி வரை, இடைவிடாது மழை பெய்தது. அணைகளுக்கு, நீர்வரத்து அதிகரித்துள்ளது. திற்பரப்பு அருவியில், தண்ணீர் ஆர்ப்பரித்து பாய்கிறது.நாகர்கோவில் – திருவனந்தபுரம் தேசிய நெடுஞ்சாலையில், சுங்கான்கடை மலையில், நேற்று முன்தினம் இரவு, பெரிய பாறை உருண்டு வந்து, மலை அடிவாரத்தில் உள்ள, அந்தோணியார் சர்ச் வளாகத்தில் விழுந்தது. உயிர்சேதம் ஏதும், இல்லை.அந்த இடத்தில், தொடர்ந்து மண் சரிந்து வருவதால், அப்பகுதி மக்கள் வெளியேற்றப்பட்டு வருகின்றனர்.
கன்னியாகுமரி மாவட்டத்தில், தொடர்ந்து பெய்து வரும் மழையால், சுங்கான்கடை மலையில் இருந்து, பாறை உருண்டு விழுந்தது.
