கபிணி அணையில் இருந்து தமிழகத்திற்கு திறக்கப்படும் உபரி நீரின் அளவு 500 கன அடியாக குறைக்கப்பட்டுள்ளது.
பெங்களூரு,
கர்நாடக மாநிலத்தில் பருவமழை தீவிரமடைந்துள்ளது. குறிப்பாக காவிரியின் பிறப்பிடமான குடகு மாவட்டத்தில் மழை வெளுத்து வாங்கியது. இதனால் அங்குள்ள அணைகள் வேகமாக நிரம்பியது.
பருவமழை தொடங்கிய நிலையிலே கபிணி அணை வேகமாக நிரம்பியது. இதனையடுத்து, அணையின் பாதுகாப்பு கருதி காவிரியில் உபரி நீர் திறந்துவிடப்பட்டது. இந்த நிலையில், கபிணி அணையில் இருந்து திறக்கப்படும் உபரி நீரின் அளவு குறைக்கப்பட்டுள்ளது. தற்போது திறக்கப்படும் உபரி நீரின் அளவு 500 கன அடியாக குறைக்கப்பட்டுள்ளது.