கருவளையம் போக்கும் தெரப்பி

கண்கள் தொடர்ந்து சோர்ந்திருந்தால், அதற்குக் கீழ் கருவளையம் உருவாகிறது. இதற்கு இயற்கை முறையை பயன்படுத்தி தீர்வு காண்பது எப்படி என்று பார்க்கலாம்.

கண்கள் தொடர்ந்து சோர்ந்திருந்தால், அதற்குக் கீழ் கருவளையம் உருவாகிறது. இதற்கு, மனஅழுத்தம், தூக்கமின்மை, எலக்ட்ரானிக் கருவிகளை அதிகம் பயன்படுத்துதல், ஊட்டச்சத்துக் குறைபாடு எனப் பல்வேறு காரணங்கள் இருக்கலாம்.

கருவளையத்தைப் போக்க, பால் அல்லது மூலிகை கிரீம்களைப் பயன்படுத்தி, க்ளென்சிங் செய்யப்படும். பிறகு, ஐஸ் கட்டிகள், கேரட் ஜூஸ் என, அவரவர் சருமத்துக்கு ஏற்றபடி கண்களைச் சுற்றி மிருதுவாக மசாஜ் செய்யலாம்.

இமைகளின் மீது பஞ்சுவைத்து, அதன் மேல், வேப்பிலை, கற்றாழை, துளசி, ஆப்பிள் உள்ளிட்ட சில இயற்கை, மூலிகைப் பொருட்களால் ஆன கலவையை வைத்து, அரை மணி நேரம் அதன் சாறு சருமத்தில் இறங்கும் வகையில் விட வேண்டும். அதன் பிறகு, தூய நீர் கொண்டு சுத்தம் செய்ய வேண்டும்.

இந்த சிகிச்சையினால், கண்களைச் சுற்றியுள்ள சருமப்பகுதிக்குச் சீரான ரத்த ஓட்டம் ஏற்பட்டு, கருவளையம் மறையத் தொடங்குகிறது. இந்த சிகிச்சைக்கு அரை மணி நேரம் தேவைப்படும். வாரத்துக்கு ஒரு முறை செய்துகொண்டால், இரண்டே மாதங்களில் கருவளையம் முற்றிலுமாக மறையும்.

 

Leave a comment

Your email address will not be published.