*சட்டப்பேரவையில் உள்ள அனைத்து கட்சிகளும் தனித்து போட்டியிட்டால் அதிமுகவும் தனித்து போட்டியிட தயாராக இருப்பதாக துணைமுதல்வர் ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.
*பட்ஜெட் உரை மீதான விவாதத்தில் பங்கேற்று பேசிய காங்கிரஸ் சட்டமன்ற தலைவர் ராமசாமி, ஜெயலலிதாவின் செல்வாக்குடன் மட்டுமே அதிமுக தேர்தலை சந்தித்து வந்ததாகவும், தமிழகத்தில் தேர்தலை நடத்தி உங்கள் பலத்தை நிரூபியுங்கள் எனவும் பேசினார்.
*தொடர்ந்து பேசிய காங்கிரஸ் உறுப்பினர் ராமசாமி, கூட்டணி இல்லாமல் அதிமுக தேர்தலை சந்திக்க தயாரா எனவும் வினா எழுப்பினார். . அதற்கு பதிலளித்து பேசிய துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், காங்கிரஸ் கட்சி திமுக தோளில் ஏறிக்கொண்டு சவாரி செய்வதாகவும், தமிழகத்தில் உள்ள அனைத்து கட்சிகள் தனியாக நின்றால் அதிமுகவும் தனித்து போட்டியிட தயார் நிலையில் இருப்பதாகவும் தெரிவித்தார்.