“காங்கிரஸில் இணையப் போகிறேன்!” – அப்துல் கலாமின் அண்ணன் மகன் அதிரடி

ராகுல் காந்தி

“விரைவில் காங்கிரஸ் கட்சியின் தலைவர் ராகுல் காந்தியைச் சந்தித்து, காங்கிரஸ் பேரியக்கத்தில் என்னை இணைத்துக் கொள்ளப் போகிறேன்” என அப்துல் கலாம் அண்ணன் மகன் ஏ.பி.ஜே.எம். ஹாஜா செய்யது இப்ராஹிம் கூறியிருக்கிறார்.

மறைந்த முன்னாள் ஜனாதிபதி ஏ.பி.ஜே அப்துல் கலாம் அவர்களுக்கு முதன்முதலாக, ஈரோடு மாவட்டம் சென்னிமலை ஸ்ரீ ராஜீவ்காந்தி பாலிடெக்னிக் கல்லூரியில் தான் சிலை அமைக்கப்பட்டது. அப்துல் கலாம் இறப்பதற்கு சில மாதங்களுக்கு முன்னதாக இந்தக் கல்லூரிக்கு வந்திருந்தார். அந்தவகையில், நேற்று அப்துல் கலாம் அவர்களுடைய மூன்றாம் ஆண்டு நினைவு தினம் இந்தக் கல்லூரியில் அனுசரிக்கப்பட்டது. இதில் அப்துல் கலாம் அவர்களுடைய அண்ணன் மகன் ஏ.பி.ஜே.எம்.ஹாஜா செய்யது இப்ராஹிம் கலந்துகொண்டு, அப்துல் கலாமுடைய சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செய்தார். மேலும், கல்லூரி, மாணவ மாணவிகள் எனப் பலரும் அப்துல் கலாமுடைய சிலைக்கு மலர் தூவி மரியாதை செலுத்தினர்.

காங்கிரஸ்

இந்தக் கல்லூரியின் தலைவரான மக்கள்.ஜி.ராஜன் என்பவர் ஈரோடு தெற்கு மாவட்ட காங்கிரஸ் கமிட்டியின் தலைவராக இருக்கிறார். அவருடைய அழைப்பின் பேரில் தான், அப்துல் கலாம் அவர்களுடைய அண்ணன் மகன் ஈரோட்டிற்கு வந்து நிகழ்ச்சியில் கலந்து கொண்டிருக்கிறார்.

Leave a comment

Your email address will not be published.