காங்கிரஸ் மூத்த தலைவரும்,  டெல்லி முன்னாள் முதல்-அமைச்சருமான  ஷீலாதீட்சித் ( 81)  காலமானார்.

ஷீலா தீட்சித் 1998 ஆம் ஆண்டு முதல் 2013 வரை தொடர்ந்து 15 ஆண்டுகள் டெல்லியின் முதலமைச்சராக பதவி வகித்தவர் ஆவார். 

ஷீலா தீட்சித் டெல்லி மாநில காங்கிரஸ் கமிட்டியின் தலைவராக  இருந்தார். சமீபத்தில்  நடந்த பாராளுமன்ற தேர்தலில் வடகிழக்கு டெல்லியில் போட்டியிட்டு தோல்வி அடைந்தார்.

இன்று காலை உடல்நிலை பாதிப்பால் மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட ஷீலா தீட்சித்  சிகிச்சை பலனளிக்காமல்  காலமானார்.