காஞ்சிபுரத்தில் அத்திவரதர் திருவிழா 48 நாட்களுக்கு நடைபெற உள்ளது.

காஞ்சிபுரத்தில் அத்திவரதர் திருவிழா 48 நாட்களுக்கு நடைபெற உள்ளது. இதனை நேரில் காண லட்சக்கணக்கான பக்தர்கள் வருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனையடுத்து தமிழக அரசின் சார்பில் 29 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டு காவல்துறை, பொதுப்பணித்துறை, மின்சாரத்துறை உட்பட பல்வேறு துறைகள் சார்பில் முன்னேற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. மாற்றுத்திறனாளிகளுக்கு 100 இலவச வீல் சேர்களும் முதியவர்களுக்கு 10 அமரக்கூடிய 5 பேட்டரி கார்களும் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன. வரிசையில் நின்று தரிசனம் செய்பவர்களுக்காக 5 கிலோ மீட்டர் நீளத்துக்கு மேற்கூரை அமைக்கப்பட்டுள்ளது. நகரின் முக்கிய பகுதிகளில் 100 இலவச கழிவறைகள், 70 குடிநீர் தொட்டிகள் அமைக்கப்பட்டுள்ளன. அதேபோல் 7 இடங்களில் 24 மணி நேர தீயணைப்பு வாகனங்களும் நிறுத்தப்பட்டுள்ளன.