காட்டு யானை ஒன்று ஜாலியாக உலா வந்ததால் பொதுமக்கள் பீதியுடன் ஓட்டம் பிடித்தனர்.

🌍நீலகிரி மாவட்டம்  கூடலூரை அடுத்த  நெலாக்கோட்டை கடை வீதியில் காட்டு யானை ஒன்று ஜாலியாக உலா வந்ததால் பொதுமக்கள் பீதியுடன் ஓட்டம் பிடித்தனர்.நேற்று காலை 6 மணிக்கு நெலாக்கோட்டை தனியார் தோட்டத்தில் இருந்து வெளியேறிய காட்டு யானை ஒன்று கூடலூர்- சுல்தான்பத்தேரி சாலையில் நடந்து சென்றது. பின்னர் நெலாக்கோட்டை கடைவீதியில் உலா சென்ற இந்த யானையை கண்ட பொதுமக்கள் பீதியுடன் அங்கிருந்து அலறி அடித்து ஓடினர்.
🌐