காட்டு யானை மிதித்து தமிழகத்தைச் சேர்ந்த ஓட்டல் ஊழியர் பரிதாபமாக இறந்தார்.

  • கேரள மாநிலம் இடுக்கி அருகே காட்டு யானை மிதித்து தமிழகத்தைச் சேர்ந்த ஓட்டல் ஊழியர் பரிதாபமாக இறந்தார். மதுரையை சேர்ந்தவர் குமார். கேரள மாநிலம் இடுக்கி அருகே உள்ள சாந்தன்பாறையில் ஒரு சுற்றுலா விடுதியில் உள்ள ஓட்டலில் பணிபுரிந்து வந்தார். இவர் மனைவி மற்றும் குழந்தைகளுடன் அருகில் உள்ள வீட்டில் தங்கி இருந்தார். நேற்று காலை வீட்டில் இருந்து மனைவி மற்றும் குழந்தைகளை அழைத்துக்கொண்டு சுற்றுலா விடுதிக்கு நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது எதிரே காட்டு யானை வந்தது. அதை பார்த்ததும் இவர்கள் அலறியடித்து ஓடினர். ஆனால் அந்த யானை குமாரை பிடித்து மிதித்து கொன்றது.
    @ அவரது மனைவியும், குழந்தைகளும் நூலிழையில் உயிர் தப்பினர்.🌐