கால் இறுதியில் நடால், ஹாலப்…

பிரெஞ்சு ஓபன் டென்னிஸில் ரபேல் நடால், சிமோனா ஹாலப் ஆகியோர் கால் இறுதிக்கு முன்னேறினார்கள்.

பாரிஸ் நகரில் நடைபெற்று வரும் இந்தத் தொடரில் ஆடவர் ஒற்றையர் பிரிவு 4-வது சுற்றில் முதல் நிலை வீரரான ஸ்பெயினின் ரபேல் நடால் 6-3, 6-2, 7-6 (7-4) என்ற நேர் செட்டில் ஜெர்மனியின் மாக்சிமிலியனை வீழ்த்தி கால் இறுதிக்கு முன்னேறினார். மகளிர் பிரிவில் முதல் நிலை வீராங்கனையான ருமேனியாவின் சிமோனா ஹாலப் 6-2, 6-1 என்ற நேர் செட்டில் பெல்ஜியத்தின் எலிஸ் மெர்டன்ஸை வீழ்த்தினார்.

2-ம் நிலை வீராங்கனையான டென்மார்க்கின் கரோலின் வோஸ்னியாக்கி 6-7, 3-6 என்ற நேர் செட்டில் ரஷ்யாவின் தரியா கசட்கினாவிடம் தோல்வியடைந்தார். ரஷ்யாவின் மரியா ஷரபோவாவுடன் மோத இருந்த அமெரிக்காவின் செரீனா காயம் காரணமாக கடைசி நேரத்தில் போட்டியில் இருந்து விலகினார். இதனால் ஷரபோவா கால் இறுதிக்கு முன்னேறினார்.

Leave a comment

Your email address will not be published.