காஷ்மீர் இணைப்புக்கு பிறகு இந்திய அரசு அளித்த வாக்குறுதிப்படி சிறப்பு சட்டம் வழங்கப்பட்டது. அதில் காஷ்மீரில் வேறு யாரும் நிலம் வாங்க முடியாது.

காஷ்மீர் இணைப்புக்கு பிறகு இந்திய அரசு அளித்த வாக்குறுதிப்படி சிறப்பு சட்டம் வழங்கப்பட்டது. அதில் காஷ்மீரில் வேறு யாரும் நிலம் வாங்க முடியாது. இயற்கை வளங்களும் அழகிய நிலப்பரப்பும் எழிலார்ந்த மக்கள் குடியும் உள்ள உலகின் உயரத்தில் வசிக்ககூடியபகுதியை வளர்ச்சிக் கண்ணோட்டத்தில் இல்லாமல் வதைப்பகுதியாக தொடர்வது வேதனையானது . இதில் இந்திய வரைப்படத்தில் இல்லாத பகுதியெல்லாம் இணைத்து போலி தலைப்பாகையுடன் இருப்பது போல் பல்கலை கழகங்கள் உட்பட அரசியல் வெளிகள் உண்மையை மறைக்கின்றது மனித உரிமை இராணுவக் காலடியில் தினம் இரத்தசேற்றில் பதிகின்றன. சொந்த நாட்டு மக்களை சொந்த இராணுவமே வேட்டையாடும் அவலக் காட்சிகள் அரங்கேறுகின்றன.. பெயரளவு நிர்வாக பணிக்கான ஆட்சிப்பொறுப்பை நுகரவிரும்பும் அரசியல் கட்சித்தலைவர்கள் கூட வீட்டுச் சிறை என்ற தகவலும் . மத்திய ஆட்சியாளர்களின் இராணுவ நடவடிக்கைகளும் அச்சமூட்டுகின்றன. அங்கு பனி மட்டுமல்ல மக்களின் வாழ்வும் அச்சத்தில் உறைந்து கிடக்கின்றது🌐