காஷ்மீர் மாநிலத்தில், அமைதியை ஏற்படுத்துவதற்காக, மத்திய அரசு புது வியூகத்தை உருவாக்கியுள்ளது.

ஸ்ரீநகர்:ஜம்மு – காஷ்மீர் மாநிலத்தில், அமைதியை ஏற்படுத்துவதற்காக, மத்திய அரசு புது வியூகத்தை உருவாக்கியுள்ளது. பிரச்னை ஏற்படுத்தக் கூடியவர்கள் என கருதப்படுவோரை, நான்கு பிரிவுகளாக பிரித்து, தனித்தனியாக அவர்களை சமாளிக்க திட்டங்கள் உருவாக்கப்பட்டுள்ளன. ஜம்மு – காஷ்மீரில் விதிக்கப்பட்டிருந்த கட்டுப்பாடுகள், நேற்று முன்தினம் சில பகுதிகளில் தளர்த்தப்பட்டன. ஸ்ரீநகர் மற்றும் காஷ்மீர் பள்ளத்தாக்கு பகுதிகளில், சில இடங்களில் நடந்த போராட்டங்களின் போது, சிறியளவில் வன்முறை ஏற்பட்டது. அதையடுத்து, இந்தப்பகுதிகளில், மீண்டும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.🌐