கிம் ஜாங் உன் பேச்சுவார்த்தைக்கு ஒப்புதல் கோரி டிரம்பிடம் மண்டியிட்டுக் கெஞ்சினார்: டிரம்ப் வழக்கறிஞர்

இஸ்ரேல்: வடகொரிய அதிபர் கிம் ஜாங் உன் பேச்சுவார்த்தைக்கு ஒப்புதல் கோரி அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்பிடம் மண்டியிட்டுக் கெஞ்சியதாக நியூயார்க் நகர முன்னாள் மேயரும், டிரம்பின் வழக்கறிஞருமான ரூடி கியூலியானி தெரிவித்துள்ளார். இஸ்ரேலில் நடைபெற்ற வணிக மாநாடு ஒன்றில் பேசிய அவர் இதனை தெரிவித்தார். முன்னதாக அமெரிக்க துணை அதிபர் மைக்பென்ஸ் அறியாமையிலும், முட்டாள்தனமாகவும் கருத்துக்களை தெரிவித்திருப்பதாக வடகொரியா குற்றம்சாட்டியது. இதற்கு பேட்டி ஒன்றில் கருத்து தெரிவித்த மைக்பென்ஸ், பேச்சுவார்த்தை விவகாரத்தில் வடகொரியா அமெரிக்காவுடன் ஏதேனும் விளையாட நினைத்தால் அது பெரும் தவறாக முடியும் என்று எச்சரித்தார். இந்நிலையில் வடகொரிய வெளியுறவுத்துறை துணை அமைச்சர் சோ சான் ஹுய் தனது அறிக்கையில் மைக் பென்ஸ் சுய கட்டுப்பாடின்றி ஆணவமான கருத்துக்களை வெளியிட்டிருப்பதாக குற்றம்சாட்டினார்.

இந்நிலையில், மிகவும் எதிர்பார்க்கப்பட்ட அமெரிக்கா – வட கொரியா அதிபர்கள் சந்திப்பை கைவிடுவதாக வெள்ளை மாளிகை வெளியிட்ட கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது. பின்னர் ஏற்கனவே பேச்சுவார்த்தையை ரத்து செய்வதாக டிரம்ப் அறிவித்த போது பேச்சுவார்த்தைக்குத் தான் தயாராக இருப்பதாகக் கூறிய கிம் ஜாங் உன்னின் கடிதத்துடன் வடகொரிய தலைவர் ஒருவர் கிம் யாங் சால் டிரம்பைச் சந்தித்தார். இதையடுத்து இரு நாட்டு அதிபர்களுக்கு இடையே வரும் 12-ஆம் தேதி சிங்கப்பூரின் செண்டோசா தீவில் உள்ள கேபெல்லா ஹோட்டலில் பேச்சுவார்த்தை நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

Leave a comment

Your email address will not be published.