கிரிக்கெட் கடவுளின் வாரிசுன்னா சும்மாவா….. வாய்ப்புகள் தானாக தேடி வருகிறது!

டெல்லி: கிரிக்கெட் கடவுள் சச்சின் டெண்டுல்கர் அடித்த ஒவ்வொரு பந்தும், எடுத்த ஒவ்வொரு ரன்னும் அவருடைய சாதனைகளை சொல்லிக் கொண்டே இருக்கும். சர்வதேசப் போட்டிகளில் விளையாடுவதில் இருந்து ஓய்வு பெற்றாலும், அவர் பற்றிய செய்திகள் வராத நாளே இல்லை. தன்னுடைய சாதனைகளால் பேசப்பட்ட சச்சின் டெண்டுல்கர், வாரிசாலும் பேசப்படுகிறார்.

சச்சின் மகன் அர்ஜூன் என்ன செய்துள்ளார் என்று நீங்க கேட்க வந்தால், சச்சினைப் பற்றி உங்களுக்கு சரியாகத் தெரியவில்லை என்றே அர்த்தம். கிரிக்கெட் ஜாம்பவான் சச்சின் ரமேஷ் டெண்டுல்கருக்கும், குழந்தை நல மருத்துவரான அஞ்சலிக்கும் இரண்டு வாரிசுகள். அர்ஜூன் கடைக்குட்டிதான். முதல் வாரிசு, சாரா பற்றிதான் இப்போது நாம் பார்க்கப் போகிறோம்.

அப்படியே அம்மா அஞ்சலியின் ஜெராக்ஸ் காப்பிபோல இருக்கும் 20 வயதாகும் சாரா, கல்லூரி படிப்பையெல்லாம் முடித்துள்ளார். சில ஆண்டுகளுக்கு முன்பே அவருக்கு சினிமாவில் நடக்கும் வாய்ப்பு வந்தது. அப்போது அதை சச்சின் மறுத்தார். சாராவுக்கு படிப்புதான் முக்கியம் என்று சச்சின் கூறியிருந்தார். சரி இப்போதுதான் படிப்பு முடிந்துவிட்டதே என்று, சிலர் சாராவை சினிமாவுக்கு அழைத்து வருவதற்கு முயற்சி செய்து வருகின்றனர். சமீபகாலமாக பல்வேறு பொது நிகழ்ச்சிகளும் சாரா கலந்து கொண்டு வருகிறார். இதைத் தவிர இன்ஸ்டாகிராமில், தன்னுடைய பல்வேறு படங்களை அவர் வெளியிட்டு வருகிறார்.

மிகவும் தேர்ந்த மாடல் போல், வித்தியாசமான ஆடைகளுடன் கண் திருஷ்டி படும் அழகுடன் சாரா உள்ளார். மிக விரைவில் அவர் சினிமாவுக்கு வருவதற்கு அதிக வாய்ப்புள்ளதாக பட்சிகள் கூறுகின்றன. அதற்கு முன், சமூகதளங்களில் சாராவின் படங்களுக்கு லைக்குகள் குவிந்து வருகின்றன.

Leave a comment

Your email address will not be published.