குலதெய்வத்தை எப்போது வழிபடுவது..?

கிராம கோவில் திருவிழா மற்றும் முக்கிய பண்டிகை திருவிழா நாட்களிலும், குலதெய்வ சிறப்பு பூஜைகளை ஒன்றாக இணைத்து செய்வதுண்டு.

கிராம கோவில் திருவிழா மற்றும் முக்கிய பண்டிகை திருவிழா நாட்களிலும், குலதெய்வ சிறப்பு பூஜைகளை ஒன்றாக இணைத்து செய்வதுண்டு. குடும்பத்தில் நடைபெறும் பிறந்த நாள் விழா, காதணி விழா, பூப்புனித நீராட்டு விழா, திருமண விழா போன்ற விசேஷ நாட்களில் குலதெய்வத்திற்கு முதல் அழைப்பிதழ் வைக்கும் பழக்கம் இருக்கிறது.

திருமண நிச்சயம் குலதெய்வத்தின் முன்பு நடக்கும் வழக்கமும் சில இடங்களில் இருக்கிறது. வருடத்திற்கு ஒரு முறை சுற்றமும், கோவில் பங்காளிகளும் ஒன்றாக இணைந்து ஆட்டு கிடாவெட்டி பொங்கல் வைத்து விழாவை போல சிறப்பாக வழிபாடு செய்கின்றார்கள்.

வழிபாடு பலன்கள்

குலதெய்வம் வழிபாட்டின் மூலம் மணமாகாதவர்களுக்கு திருமணம் நடைபெறும். குழந்தை வரம் பெறுவது, தீராத நோய்களுக்கு பரிகாரம் பெறுவது, கல்வி, தொழில் விருத்தி கிடைப்பது, வழக்குகளில் நீதி கிடைப்பது முதலிய பயன்கள் பெறப்படுகிறது.

அடிப்படையில் இந்துமதம் பற்றற்ற தன்மையை போதிக்கிறது, அதாவது அனைத்தையும் துறந்து தியானம், தவம் மூலம் இறை நிலையை அடைவது. ஆனால் இந்த குலதெய்வம் மனிதன் லௌகீக வாழ்க்கைக்கு தேவையான பலன்களையே அளிக்கிறது.

2 comments

Leave a comment

Your email address will not be published.