குளோனிங் முறையில் ஏ.டி.எம். கார்டு தயாரித்து வெளிநாட்டினரிடம் ரூ.30 கோடி மோசடியில் ஈடுபட்ட 5 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
மும்பை,
குளோனிங் முறையில் ஏ.டி.எம். கார்டு தயாரித்து வெளிநாட்டினரிடம் ரூ.30 கோடி மோசடியில் ஈடுபட்ட 5 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
5 பேர் கைது
மும்பைக்கு சுற்றுலா வரும் வெளிநாட்டினரின் ஏ.டி.எம்., கிரெடிட் கார்டுகளை குளோனிங் முறையில் தயாரித்து ஒரு கும்பல் மோசடியில் ஈடுபட்டு வருவதாக போலீசாருக்கு புகார்கள் வந்தன.
இதுகுறித்து மும்பை குற்றப்பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். இதில் மோசடியில் ஈடுபட்டதாக சுபேர், ஹசன், பகிம், அபுபக்கர், முகஷே் ஆகிய 5 பேரை கைது செய்தனர்.
ரூ.30 கோடி மோசடி
கைது செய்யப்பட்டவர்கள் சட்டவிரோதமாக வெளிநாட்டு சுற்றுலா பயணிகளின் வங்கி கணக்கு விவரங்களை பெற்று உள்ளனர். பின்னர் அவர்கள் அதன் மூலம் வெளிநாட்டினரின் ஏ.டி.எம்., கிெரடிட் கார்டுகளை குளோனிங் முறையில் தயாரித்து மோசடியில் ஈடுபட்டுள்ளனர்.
இந்த கும்பல் கடந்த 5 ஆண்டுகளில் இதே பாணியில் மும்பை தவிர கோவா, இமாச்சல் உள்ளிட்ட சுற்றுலா தலங்களுக்கு வந்த வெளிநாட்டினரின் வங்கி கணக்கில் இருந்து ரூ.30 கோடி மோசடி செய்யததாக கூறப்படுகிறது. போலீசார் மோசடி கும்பலுடன் தொடர்புடைய மேலும் பலரை தேடி வருகின்றனர்.