குழந்தைகளிடம் சேமிப்பு பழக்கத்தை உண்டாக்குவது எப்படி?

குழந்தைகளுக்கு பாக்கெட் மணி குடுக்கும் வழக்கம் என்பது இயல்பாகிவிட்டது. ஸ்நாக்ஸ் வகைகளுக்கு, வேண்டியவற்றை வாங்குவதற்கு என்று பல காரணங்கள் சொல்லப்படும் பாக்கெட் மணியை குழந்தைகளுக்கு சேமிப்பு பழக்கமாக மாற்றுவது எப்படி என்று பார்க்கலாம்.

* பள்ளிக்குச் செல்லும் குழந்தைகளுக்கு பாக்கெட் மணி கொடுத்தனுப்பும் பெற்றோர்கள், ஒருநாளைக்கு 10 ரூபாய் என்று தீர்மானித்தால் தினமும் பத்து ரூபாய் மட்டுமே கொடுக்கவேண்டும். அதுக்கு மேல் ஒரு பைசாக்கூடா தரக்கூடாது என்பதில் பெற்றோர்கள் கண்டிப்பாக இருக்கவேண்டும்.

* குழந்தைகள் அடம்பிடிக்கிறார்களே.. கேட்ட பணத்தை கொடுத்துவிட்டால் பிரச்னை தீர்ந்துவிடும் என்று ஒரு போதும் எண்ணாதீர்கள். ஒரு தடவை அதிக பணம் கொடுத்துவிட்டால், கேட்டதும் தந்துவிடுவார்கள் என்ற எண்ணம் குழந்தைகளுக்கு வந்துவிடும். வரம்புக்கு மீறி செலவு செய்யக்கூடாது என்பதை அவர்களுக்கு புரிய வைக்கும் தருணமே இதுதான் என்பதை புரிந்துகொள்ளுங்கள்.

விலை உயர்ந்த பொருளை கேட்கிறார்கள் எனும் நேரத்தில் ‘நீ சமத்தா நடந்துகிட்டா நான் பாக்கெட் மணி தருவேன். அதை சேர்த்து வைத்து உனக்கான பொருளை நீ வாங்கிக்கோ’ என்று சொல்லுங்கள். இதனால் சேமிப்பு பழக்கமும் கைகூடும்.

* பாக்கெட் மணியைச் சேமிக்க பெரியது, சிறியது என இரண்டு உண்டியல்களை குழந்தைகளுக்கு வாங்கிக்கொடுங்கள், சிறிய உண்டியலில் சேமிக்கும் பணத்தை அன்றாட தேவைக்காக பயண்படுத்திக்கொள்ளவும்… பெரிய உண்டியலில் சேமிக்கும் பணத்தைக் கொண்டு (ஒன்று அல்லது இரன்டு மாதங்கள் கழித்து) பிடித்த விளையாட்டுப் பொருட்களை வாங்கவும் பழக்கப்படுத்துங்கள்.

இதனால் செலவு செய்வதைக் குறைத்துக்கொண்டு விரும்பிய பொருளுக்காக சேமிக்கத் துவங்குவார்கள். பணத்தின் அருமையை புரிந்துகொள்வதோடு, திட்டமிட்டு பொருட்களை வாங்கும் திறமையும் வளர காரணமாகிவிடும். சேமித்து வைத்த பணத்தைக் கொண்டு ஒரு பொருள் வாங்கும்போது குழந்தைகளுக்கு தாங்களே சம்பாதித்து வாங்கியதுபோல ஃபீல் கிடைக்கும்.

* சிறு வயதில் சேமிக்கும் பழக்கத்தை ஏற்படுத்தினால் பெரியவர்களாகும் போது பணத்தின் அருமை புரியும். அதை புரிய வைக்க வேண்டியது நம் கடமை.

Leave a comment

Your email address will not be published.