திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி அருகே உள்ள சேவூர் கிராமத்தை சேர்ந்த குமார் – சோலையம்மாள் தம்பதிக்கு கடந்த 14ஆம் தேதி பெண் குழந்தை பிறந்துள்ளது. இதையடுத்து, கடந்த 16ஆம் தேதி பச்சிளம் குழந்தையுடன் சோலையம்மாள் மருத்துவமனையில் இருந்து மாயமானார். இது குறித்து மருத்துவமனை நிர்வாகம் அளித்த புகாரின் பேரில் விசாரணை செய்த போலீசார், சென்னையில் இருந்த சோலையம்மாளை கைது செய்தனர். காவல்துறையினர் நடத்திய விசாரணையில், சோலைம்மாளுக்கும் அவரது கணவர் குமாரின் சகோதரர் பாபுவுக்கும் தவறான உறவு இருந்ததும், அந்த உறவின் மூலமாக இந்த குழந்தை பிறந்ததும் தெரியவந்தது. இதனால், அக்குழந்தையை சோலையம்மாவும், பாபுவும் சேர்ந்து கொலை செய்து சேவூர் கிராமத்தில் உள்ள ஒரு விளை நிலத்தில் புதைத்தது தெரியவந்தது.
@ என்ன கொடுமையப்பா!🌐
குழந்தையை கொலை செய்து சேவூர் கிராமத்தில் உள்ள ஒரு விளை நிலத்தில் புதைத்தது தெரியவந்தது.
