கேரளத்தில் வரலாறு காணாத பெருமழை வரப்போகிறது

கேரளத்தில் வரலாறு காணாத பெருமழை வரப்போகிறது என்று இந்திய வானிலை ஆய்வுத் துறை, ஐதராபாத் இன்கோயிஸ், இஸ்ரோ, குஸாட் என ஐந்து நிறுவனங்கள் தொடர்ச்சியாக முன்னெச்சரிக்கை விடுத்தன. முன்னமே போதுமான அளவில் நீரை வெளியேற்றி, அணைகளின் நீர்மட்டத்தைக் கட்டுப்பாட்டில் வைத்திருந்திருக்க முடியும். அது நடக்காததற்கு அதிகாரிகளின் பணத்தாசை மட்டுமே காரணம். ஒவ்வொரு துளித் தண்ணீரும் அவர்களுக்கு மின்சாரம். ஒவ்வொரு யூனிட் மின்சாரமும் அவர்களுக்குப் பணம். அறிவின்மையும் அகந்தையும் பேராசையும் ஒன்று சேர்ந்தபோது உருவெடுத்த இந்தப் பெருவெள்ளம் முற்றிலும் மனித உருவாக்கமே என்கிறது இந்து பத்திரிகை!🌐