இந்தியாவில் கோடைக்காலம் வந்துவிட்டால், உணவு பழக்கங்களில் மாற்றம் ஏற்படுவது வழக்கம். அவ்வாறு, காய்கறிகள் பழங்கள் ஆகியவை ஜூஸ் வடிவிலும், லேசான உணவு வகைகளாகவும் எடுத்து கொள்ளப்படுகிறது. குறிப்பாக, கோடைக்கால பழங்கள் அதிக ஊட்டச்சத்து நிறைந்ததாக இருக்கும். அதுமட்டுமில்லாமல், கோடைக்காலத்து பழங்கள் சுவை கூடியவை, காலம் மாறும் போது சுவையும் குறைந்துவிடும்.

கோடைக்கால வெயிலுக்கு தினசரி உணவுகள் உடன், ஊட்டச்சத்து மிக்க பழங்கள் அதிக அளவில் சாப்பிட வேண்டும். சாலடாக, குளிர்பானமாக அல்லது பச்சை பழங்களை அப்படியே சாப்பிடலாம். எனினும், உடல் பாதிப்புகள் உள்ளவர்கள், மருத்துவரின் பரிந்துரையை கேட்டு குறிப்பிட்ட அளவில் சாப்பிடலாம் கோடைக்கால பழங்களில் இருக்கும் கலோரியின் அளவு
மாம்பழம்
கோடைக்கால பழங்கள் என்றாலே நினைவுக்கு வருவது மாம்பழங்கள். அதிக இரத்த சர்க்கரை அளவு உள்ளவர்கள் மாம்பழம் சாப்பிட கூடாது என்றாலும், கட்டுப்பாட்டான அளவில் எடுத்து கொண்டால், உடல் நலத்திற்கு பாதிப்பு ஏற்படாது. 100 கிராம் மாம்பழத்தில் 60 கலோரிகள் உள்ளன என அமெரிக்க விவசாய துறை கூறியுள்ளது. அதனால், குறைந்த கலோரி உணவுகளுக்கு மாம்பழம் எடுத்து கொள்ளலாம்.