கோதுமை ரவை – பயத்தம்பருப்பு கஞ்சி

சர்க்கரை நோயாளிகள், டயட்டில் இருப்பவர்களுக்கு கோதுமை ரவை – பயத்தம்பருப்பு கஞ்சி மிகவும் நல்லது. இன்று இந்த கஞ்சியை செய்வது எப்படி என்று பார்க்கலாம்.

தேவையான பொருட்கள்

பச்சைப் பட்டாணி – கால் கப்,
உப்பு – தேவைக்கேற்ப.
நெய் – சிறிதளவு,
உருளைக்கிழங்கு – 2
கோதுமை ரவை – 1 கப்,
பயத்தம்பருப்பு – 50 கிராம்
வறுத்த வேர்க்கடலை – 10 கிராம்

செய்முறை

வேர்க்கடலையை கொரகொப்பாக உடைத்து கொள்ளவும்.

வாணலியில் நெய் விட்டு கோதுமை ரவை, பயத்தம்பருப்பை தனித்தனியாக வறுக்கவும்.

பயத்தம்பருப்பை ஒன்றிரண்டாக மிக்ஸியில் பொடித்து கொள்ளவும்.

உருளைக்கிழங்கை தோல் நீக்கி சதுரமாக நறுக்கி, தனியாக வைக்கவும்.

குக்கரில் 3 கப் நீர் விட்டு வறுத்த ரவை, பயத்தம்பருப்பு, உப்பு சேர்த்து, நறுக்கிய உருளைக்கிழங்கு, உப்பு, பச்சைப் பட்டாணியையும் சேர்த்து 2 விசில் வரும் வரை வேகவிட்டு, இறக்கவும்…

விசில் போனவுடன் குக்கர் மூடியை திறந்து வேர்க்கடலை தூவி, சூடாக பரிமாறவும்.

சத்து நிறைந்த கோதுமை ரவை – பயத்தம்பருப்பு கஞ்சி ரெடி.

Leave a comment

Your email address will not be published.