கோவை : போளுவாம்பட்டி வனப்பகுதியில் காட்டுப் பன்றியை வேட்டையாடிய 4 பேர் கொண்ட கும்பலை வனத்துறையினர் கைது செய்தனர்.

கோவை : போளுவாம்பட்டி வனப்பகுதியில் காட்டுப் பன்றியை வேட்டையாடிய 4 பேர் கொண்ட கும்பலை வனத்துறையினர் கைது செய்தனர்.

போளுவாம்பட்டி வனப்பகுதிக்குட்பட்ட முல்லன்காடு பகுதியில் உள்ள பட்டா நிலத்தில் காட்டுப் பன்றியை வேட்டையாடி, சமைத்து கொண்டு இருப்பதாக வனத்துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து, சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற வனத்துறையினர், பழனிசாமி (38), கருப்பையா (39), ரங்கசாமி (40), ரங்கராஜ் (35) ஆகியோரை கைது செய்தனர். பின்னர், கைது செய்யப்பட்டவர்களுக்கு வனவிலங்கு பாதுகாப்பு சட்டத்தின்படி தலா ரூ. 40,000 அபராதம் விதிக்கப்பட்டது.
இதேபோல, கடந்த திங்கட்கிழமை கற்பகம் கல்லூரி அருகே கள்ளப் பருந்தை விற்க முயன்ற இருவரை வனத்துறையினர் கைது செய்தனர். விற்கப்பட்ட பருந்தை மன்னார்காடு பகுதியில் வனத்துறையினர் மீட்டனர். இந்த சம்பவம் தொடர்பாக பல்லடத்தை சேர்ந்த ஏ. பஷல் அகமது (22), பி. சஞ்சய் (22) ஆகியோருக்கு ரூ. 8,000 அபராதம் விதிக்கப்பட்டது.