கோவை மாநகராட்சி சார்பில் வறுமை கோட்டிற்கு கீழ் உள்ளவர்கள் பற்றிய கணக்கெடுக்கும் பணி விரைவில் தொடங்க உள்ளது.
மக்களவை மற்றும் இடைத் தேர்தலுக்கு முன்னதாக, வறுமை கோட்டிற்கு கீழ் உள்ளவர்களின் விபரங்களை சரிபார்க்க மாநகராட்சிகளுக்கு தமிழக அரசு உத்தரவிட்டது. இதையடுத்து, கள ஆய்வு மேற்கொள்ள 600 பேர் நியமனம் செய்யப்பட்டு, 15 நாட்களில் பணிகளை விரைந்து முடிக்க உத்தரவிடப்பட்டுள்ளதாக கோவை மாநகராட்சியின் மூத்த அதிகாரி தெரிவித்துள்ளார். சம்பந்தப்பட்டவர்களின் குடும்ப உழ்ருப்பினர்களின் விபரம், வங்கி கணக்கு விபரம், ஆதார் எண், சொந்த வீடா அல்லது வாடகை வீடா..? மற்றும் ஏதேனும் சொத்துக்கள் இருக்கின்றனவா..?உள்ளிட்ட பல்வேறு விவரங்களை சேகரிக்க உள்ளனர். இதில், ஏதேனும் வேறுபாடுகள் இருப்பின் அவற்றை மாற்றம் செய்யப்படும்
வறுமை கோட்டிற்கு கீழ் உள்ளதாக சுமார் 1.50 லட்சம் பேர் விண்ணப்பித்துள்ளனர். கடந்த 2008-ம் ஆண்டு எடுக்கப்பட்ட கணக்கெடுப்பில் 65,000 பேர் வறுமை கோட்டிற்கு கீழ் இருப்பது உறுதி செய்யப்பட்டது. உள்ளாட்சி அமைப்புகளின் பரிந்துரையின் பேரில் வறுமை கோட்டிற்கு கீழ் உள்ளவர்களின் பட்டியலில் இடம் பெறும் குடும்பங்களுக்கு, முதலமைச்சர் அறிவித்தபடி, ரூ. 2,000 பிப்ரவரி முதல் விநியோகிக்கப்பட் உள்ளது.🛑