சத்து நிறைந்த சிறுதானிய பாலக் அடை…!

சிறுதானியங்களில் அதிகளவு சத்துக்கள் நிறைந்துள்ளது. இன்று சிறுதானியங்கள், பாலக்கீரை சேர்த்து அடை செய்வது எப்படி என்று பார்க்கலாம்.

தேவையான பொருட்கள் :

குதிரை வாலி, வரகரசி, தினை, சாமை – தலா கால் கப்,
கடலைப் பருப்பு – அரை கப்,
துவரம் பருப்பு, பாசிப்பருப்பு – தலா 5 டீஸ்பூன்,
பச்சை மிளகாய் – ஒன்று,
தோல் சீவிய இஞ்சி – ஒரு சிறிய துண்டு,
பாலக் கீரை – ஒரு கட்டு,
கறிவேப்பிலை – சிறிதளவு,
கொத்தமல்லித்தழை – சிறிதளவு,
உப்பு, எண்ணெய் – தேவையான அளவு.

செய்முறை :

பாலக்கீரையை சுத்தம் செய்து பொடியாக நறுக்கி கொள்ளவும்.

கொத்தமல்லியை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

சிறுதானிய அரிசி வகைகளுடன் பருப்பு வகைகள் சேர்த்து 4 மணி நேரம் ஊறவைக்கவும்.

பிறகு களைந்து இஞ்சி, பாலக் கீரை, கறிவேப்பிலை, பச்சை மிளகாய், உப்பு தண்ணீர் தெளித்து கெட்டியாக அரைக்கவும்.

அதனுடன் கொத்தமல்லித்தழை சேர்த்து நன்றாக கலந்து நான்கு மணி நேரம் புளிக்க விடவும்.

தோசைக்கல்லை காய விட்டு மாவை சிறிய அடைகளாக ஊற்றி சுற்றிலும் சிறிதளவு எண்ணெய் விட்டு இருபுறமும் வேக வைத்து எடுக்கவும்.

ஹெல்தியான, சத்தான சிறுதானிய பாலக் அடை ரெடி.

பயன்: சிறுதானியங்களின் சத்துக்களுடன் கீரையில் உள்ள சத்துக்களையும் பெறலாம். ஒரு சிறந்த ஊட்டச்சத்து உணவு.

1 comment

Leave a comment

Your email address will not be published.