சந்திரயான்-2 திட்டத்தை இந்திய விஞ்ஞானிகள் செயல்படுத்தியதைக் கண்டு உலக விஞ்ஞானிகள் வியக்கிறார்கள்.

தரையிறங்குவதில் பின்னடைவு இருந்தபோதிலும் இஸ்ரோவின் சந்திரயான்-2 மிஷன் தோல்வி அல்ல
@ ஹாலிவுட் வெற்றிப்படம் அவெஞ்சர்ஸ் என்ட் கேம்-ஐ விட குறைந்த பட்ஜெட்டில், சந்திரயான்-2 திட்டத்தை இந்திய விஞ்ஞானிகள் செயல்படுத்தியதைக் கண்டு உலக விஞ்ஞானிகள் வியக்கிறார்கள். சந்திரயான் 2 பணிக்கு சுமார் 140 மில்லியன் டாலருக்கும் குறைந்த அளவு செலவுதான் ஆகி உள்ளது. செவ்வாய் கிரகம் உள்ளிட்ட எதிர்கால விண்வெளி ஆய்வு பணிகளுக்கும் இந்த பணி பெரும் முக்கியத்துவம் வாய்ந்தது. அமெரிக்கா தனது அப்பல்லோ பணிக்காக 100 பில்லியன் டாலருக்கும் அதிகமாக செலவழித்தது.இந்த திட்டத்தில் இந்தியாவின் ஒவ்வொரு அசைவையும் உலக நாடுகள் கண்காணித்து வருகின்றன. சந்திரனின் தென் துருவத்தை தொடுவதற்கு சற்று முன்பு சந்திரன் லேண்டர் விக்ரமுடன் தொடர்பை இழந்தது.🌐