சந்திராயன் விண்கலம் நிலவில் இறங்குவதை பார்வையிட நாடு முழுவதிலும் இருந்து தேர்வு செய்யப்பட்ட சுமார் 60 மாணவர்கள் இஸ்ரோ மையத்திற்கு வந்திருந்தனர்.

சந்திராயன் விண்கலம் நிலவில் இறங்குவதை பார்வையிட நாடு முழுவதிலும் இருந்து தேர்வு செய்யப்பட்ட சுமார் 60 மாணவர்கள் இஸ்ரோ மையத்திற்கு வந்திருந்தனர். மாணவர்களும் விக்ரம் லேண்டார் நிலவில் தரையிறங்குவதை ஆர்வத்துடன் கவனித்து வந்தனர். திடீரென்று சிக்னல் துண்டிக்கப் பட்டதால் விஞ்ஞானிகளுடன் சேர்ந்து மாணவர்களும் சோகமாயினர். இதை கண்ட பிரதமர் மோடி விஞ்ஞானிகளுக்கு ஆறுதல் சொன்ன கையோடு இந்தியாவின் எதிராகலம் மாணவர்கள் கையில்தான் உள்ளது என்பதை உணர்ந்தவராய், சோகத்திலிருந்த மாணவர்களை உற்சாகமாக பேசி தேற்றினார். அப்போது மாணவர்ளுக்கு விக்ரம் லேண்டர் நிலவில் இறங்கியது அந்த அளவில் நாம் வெற்றிபெற்றுள்ளோம், ஆனால் சிக்னல் துண்டிக்கப்பட்டுவிட்டது அவ்வளவுதான் ஆனால் இதற்காக வருத்தப்பட தேவையில்லை என்றார் பிரதமர்🌐