சந்திராயன் 2 ஏவுவதை நேரில் 👀பார்வையிடும் 💺ஜனாதிபதி

🌍 *🚀சந்திராயன் 2 ஏவுவதை நேரில் 👀பார்வையிடும் 💺ஜனாதிபதி*

3,290 கிலோ எடை கொண்ட 🚀சந்திராயன்-2 விண்கலம் ஜிஎஸ்எல்வி மார்க் 3 ராக்கெட் மூலம் வரும் ஜூலை மாதம் 15ம் தேதி விண்ணில் ஏவப்பட உள்ளதாக இஸ்ரோ தெரிவித்துள்ளது📣. அதற்கான இறுதிக்கட்ட பணிகளில் இஸ்ரோ 👥விஞ்ஞானிகள் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். 🚀சந்திராயன் 2 விண்கலம் சந்திரனின் தென் துருவப் பகுதிக்குச் செல்லும், இதற்கு முன்னர் எந்த நாடும் அந்த பகுதிக்கு சென்றதில்லை. 15ம் தேதி அதிகாலை ⌚2 மணி 51 நிமிடங்களுக்கு ஸ்ரீஹரிகோட்டா ஏவுதளத்தில் இருந்து ஜி.எஸ்.எல்.வி., மார்க் 3 ராக்கெட் மூலம் நிலவில் தரையிறங்கி ஆய்வு👀 செய்யும் ரோபோ ரோவர் ஏவப்படுகிறது. 💰ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பிலான 📡இஸ்ரோவின் இந்த திட்டத்தை, ஏவப்படும் போது நேரில் பார்வையிட👀 வருமாறு 💺ஜனாதிபதி ராம்நாத் கோவிந்தை சந்தித்து👀 கடந்த மாதம் 21ம் தேதி இஸ்ரோ தலைவர் 🤵சிவன் அழைப்பு🗣 விடுத்தார். 💺ராம்நாத் கோவிந்த் வருகை தந்தால், 🚀ராக்கெட் ஏவுதலைக் காணும் 3வது ஜனாதிபதி ஆவார். முன்னதாக, 💺அப்துல் கலாம் 2005ம் ஆண்டு 🚀கார்டோசாட் 1, 2013ம் ஆண்டு 💺பிரணாப் முகர்ஜியும் 🚀செயற்கைக் கோள் ஏவுதலை நேரில் பார்வையிட்டது குறிப்பிடத்தக்கது.