சந்தை மதிப்பு அடிப்படையில் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவ னம் மீண்டும் முதலிடத்தை பிடித் திருக்கிறது. டிசிஎஸ் நிறுவனம் இரண்டாம் இடத்துக்கு தள்ளப் பட்டிருக்கிறது. நேற்றைய வர்த்த கத்தின் முடிவில் 3.01 சதவீதம் உயர்ந்து 1,186 ரூபாயில் முடிவ டைந்தது. இதனால் நிறு வனத்தின் மொத்த சந்தை மதிப்பு ரூ.7.51 லட்சம் கோடியாக இருக்கிறது. ஒரு இந்திய நிறுவனத் தின் சந்தை மதிப்பு ரூ.7.50லட்சம் கோடியை தாண்டுவது இதுவே முதல்முறையாகும்.
டிசிஎஸ் பங்கு 0.23 சதவீதம் சரிந்து 1,940 ரூபாயில் முடிவடைந் தது. நேற்றைய வர்த்தகத்தின் முடிவில் இதன் சந்தை மதிப்பு ரூ.7.43 லட்சம் கோடியாக முடிந்தது. கடந்த ஏப்ரல் முதல் டிசிஎஸ் நிறுவனம் முதலிடத்தில் இருந்தது கவனிக்கத்தக்கது.
ரிலையன்ஸ் நிறுவனத்தின் காலாண்டு முடிவுகள் சிறப்பாக வந்திருப்பதால் நிறுவனத்தின் சந்தை மதிப்பு தொடர்ந்து உயர்ந்து வருவதாக சந்தை வல்லுநர்கள் தெரிவிக்கின்றனர். ரிலையன்ஸ் ஜியோ செயல்பாட்டு அடிப்படையில் நிகர லாபம் அடைந்திருக்கிறது.