சாக்லேட் தயாரிப்பு !
சிறுவரில் தொடங்கி பெரியவர் வரை சாக்லேட்டை விரும்பாதோர் இன்று எவருமே இருக்கமாட்டார்கள். அதற்கு காரணம் இதன் அளவற்ற சுவையும் கண்ணை கவரும் இதன் வடிவமுமே ஆகும். அதிக அளவில் முதலீடு தேவைப்படாத, அதே நேரத்தில் எதிர்காலத்தில் மிகச் சிறந்து விளங்கி, நல்ல வருமானத்தை தரக்கூடிய இந்த தொழிலை நீங்கள் தொடங்கினால் நிச்சயம் வெற்றி பெறலாம். இதற்கான தொழில் நுட்பத்தை கற்றுக்கொண்டு கொஞ்சம் வித்தியாசம் காட்டினால் போதும் இந்த தொழிலில் நமக்கென ஒரு தனி இடத்தை சுலபமாக அடைந்து விட முடியும்.
தேவையான பொருட்கள் :
👉 டிரிங்கிங் சாக்லேட்
👉 கோகோ பவுடர்
👉 மில்க்மெய்ட்
👉 பால்பவுடர்
தயாரிக்கும் முறை :
👉 பவுடராக உள்ள பொருட்களை ஒன்றன்பின் ஒன்றாக சல்லடையில் சலித்த பின், கலந்து கொள்ள வேண்டும். பிறகு மில்க்மெயிடை சேர்த்து கலக்க வேண்டும்.
👉மில்க்மெயிடுக்கு பதிலாக தண்ணீரும் சேர்க்கலாம், தண்ணீர் சேர்க்கும்பொழுது சிறிது சிறிதாக தெளித்து பிசைய வேண்டும், தண்ணீருக்கு பதிலாக மில்க்மெயிட் சேர்த்தால் சுவைகூடும்.
👉 இந்த கலவை கெட்டியாக இருக்கவேண்டும், சிறிது தளர்வாக இருந்தால் பால்பவுடர் சேர்த்துக்கொள்ளலாம்.
👉 பின்னர் இக்கலவையை நம் விருப்பத்திற்கு ஏற்ற வடிவங்களில் ஊற்றி இதனை குளிரூட்டியில் வைக்க வேண்டும்.
👉 சாக்லேட் நன்றாக கெட்டியானதும் வெளியே எடுத்து நம் நிறுவனத்தின் பெயர் அச்சிடப்பட்ட காகிதங்களில் அடைத்தால் விற்பனைக்குத் தயார்.
விற்பனை செய்யும் முறை :
👉 வெவ்வேறு விதமான சுவைகளில் விற்பனைக்கு இறங்கும்போது சுலபமாக மார்க்கெட்டிங் செய்ய முடியும். டிபார்ட்மெண்டல் ஸ்டோர், மொத்த மற்றும் சில்லறை வியாபாரிகள் மூலம் விற்பனை செய்யலாம். தரமும், சுவையும் அதிகரிக்க அதிகரிக்க ஆர்டர்கள் குவிந்து கொண்டே இருக்கும்.