சாதத்திற்கு அருமையான கோவக்காய் பொரியல்

சாம்பார் சாதம், சாதம், தோசை, சப்பாத்திக்கு தொட்டுக்கொள்ள அருமையாக இருக்கும் கோவக்காய் பொரியல். இன்று இந்த பொரியலை செய்வது எப்படி என்று பார்க்கலாம்.

தேவையான பொருட்கள் :

கோவக்காய் – அரை கிலோ,
மஞ்சள் தூள் – அரை தேக்கரண்டி,
உப்பு – தேவைக்கேற்ப.

அரைக்க :

தேங்காய் – ஒரு சில்லு,
வரமிளகாய் – 2,
சின்ன வெங்காயம் – 4,

தாளிக்க:

எண்ணெய், கடுகு, உளுந்தம் பருப்பு, கறிவேப்பிலை

செய்முறை :

அரைக்கக் கொடுத்துள்ள பொருட்களை மிக்சியில் போட்டு கொரகொரப்பாக அரைத்துக் கொள்ளவும்.

கோவக்காயை நன்றாக கழுவி நீளவாக்கில் துண்டுகளாக வெட்டிக்கொள்ளவும்.

பாத்திரத்தில் எண்ணெய் விட்டு தாளிக்கக் கொடுத்துள்ள பொருட்களை தாளித்த பின்னர் நீளமாக நறுக்கிய கோவக்காயை சேர்த்து வதக்கவும்.

கோவக்காய் அரை வேக்காடு வெந்ததும், அரைத்து வைத்துள்ள தேங்காய் விழுது, உப்பு மற்றும் மஞ்சள் தூள் சேர்த்து மேலும் 5 நிமிடங்கள் வேகவிடவும்.

தேங்காய் மற்றும் வெங்காயத்தின் பச்சை வாசனை அடங்கியதும், அடுப்பிலிருந்து இறக்கவும்.

சுவையான கோவக்காய் பொரியல் தயார்.

Leave a comment

Your email address will not be published.