சிரியாவில் ரஷ்ய போர் விமானங்கள் தாக்குதல் : 44 பேர் பலி

இட்லிப்: சிரியாவில் நுஸ்ரா முன்னணி என்னும் கிளர்ச்சியாளர்கள் கைப்பற்றிய இட்லிப் மாகாணத்தின் கிழக்கு பகுதியில் உள்ள ஜர்தானா கிராமத்தின்மீது ரஷ்ய போர் விமானங்கள் நேற்று தாக்கதல் நடத்தியுள்ளது. இதில் 44 பேர் உயிரிழந்ததாக ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. மேலும் 60க்கும் மேற்பட்டோர் உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை அதிகரிக்க கூடும் என்றும் கூறப்பட்டுள்ளது.

இடிபாடுகளுக்கு இடையே உடல்களைத் தேடும் பணி முடுக்கி விடப்பட்டுள்ளது. எனினும், இந்த தாக்குதலுக்கும் தங்களுக்கும் தொடர்பு இல்லை என ரஷியா மறுப்பு தெரிவித்துள்ளது. சில நாட்களாக ஆயிரக்கணக்கான போராளிகள் மற்றும் பொதுமக்கள் அப்பகுதியை விட்டு போர் அச்சத்தால் வெளியேறி வருவது குறிப்பிடத்தக்கது.

Leave a comment

Your email address will not be published.