சிலிண்டர்களுக்கான கட்டணம் செலுத்த ஸ்வைப் மெஷின் அறிமுகம்
வீடுகளுக்கு சிலிண்டர்களை வினியோகம் செய்யும் போது அவர்கள் அதற்கான கட்டணத்தை பணமாக செலுத்தும் நிலை தற்போது உள்ளது. இதனால் சில்லறை பிரச்சினை ஏற்படுகிறது. மேலும் கூடுதல் பணம் தந்தால் தான் சிலிண்டரை வினியோகம் செய்வோம் என்று கியாஸ் ஏஜென்சி ஊழியர்கள் பல இடங்களில் தகராறு செய்கின்றனர். இதனால் இதற்கு தீர்வு காணும் வகையில் டிஜிட்டல் முறையில் ஸ்வைப் செய்து பணபரிமாற்றம் செய்யும் முறையை கோவை இண்டேன் நிறுவனம் அறிமுகம் செய்துள்ளது. இதற்கான அறிமுக விழா மற்றும் சிலிண்டர் விநியோகம் செய்யும் ஊழியர்களுக்கு ஸ்வைப் மெசின் வழங்கும் விழா கோவை சுந்தராபுரம் அசோக் இண்டேன் ஏஜன்சி வளாகத்தில் நடைபெற்றது. இண்டேன் நிறுவன மண்டல மேலாளர் சனில் குமார் மற்றும் இண்டேன் நிறுவனத்தின் மேலாளர்கள் அலெக்ஸி ஜோசப், சத்யபிரியா, பிரதாப் மற்றும் அசோக் இண்டேன் ஏஜன்சி உரிமையாளர் அசோக் ஆகியோர் கலந்து கொண்டு சிலிண்டர் விநியோக ஊழியர்களுக்கு டிஜிட்டல் பண பரிமாற்றம் செய்வதற்கான ஸ்வைப் மெசினை வழங்கினர்.
சிலிண்டர்களுக்கான கட்டணம் செலுத்த ஸ்வைப் மெஷின் அறிமுகம்..
