சுய தொழில்கள்

வீட்டில் இருந்து கொண்டு சுய தொழில்கள் செய்து அதிக லாபம் பெறுவது எப்படி என்பதை அறிந்து கொள்ள, நித்ரா சுய தொழில்கள் செயலியை உடனே டவுன்லோடு செய்யுங்கள்.

http://bit.ly/2J3ZCgA

பாதாம் மில்க் ரெடி மிக்ஸ் !
 நாம் அன்றாட வாழ்வில் டீ, காபி மற்றும் பால் போன்றவற்றை பருகுவது வழக்கமான ஒன்றாகும். சிலர் இதனுடன் ஊட்டச்சத்து தரும் பவுடர்களை கலந்து பருகுவதை வழக்கமாக கொண்டுள்ளனர். ஆனால் இந்த பவுடர்களை, சில தனியார் நிறுவனங்கள் அதிகப்படியான விலைகளில் கடைகளில் விற்று வருகின்றனர். மேலும் நீண்ட நாட்கள் பவுடர் கெடாமல் இருக்கவும், சுவைக்காகவும் பல இரசாயனங்களை கலந்து விற்பனை செய்கின்றர்.

இதனால் பயன்படுத்துவோருக்கு போதிய அளவு ஆரோக்கியமும் கிடைப்பதில்லை. ஆனால் இந்த பவுடரை நாம் சுத்தமான முறையில் வீட்டிலேயே தயாரித்து விற்பதால் மக்களிடத்தில் நல்ல வரவேற்பு கிடைக்கும். மேலும் இதன் மூலம் அதிகப்படியான இலாபம் அடையலாம்.

தேவையான பொருட்கள்:

👉 பாதாம் பருப்பு – 100 கிராம்

👉 சர்க்கரை – 200 கிராம்

👉 குங்குமப்பூ – 15 இதழ்கள்

👉 பாதாம் எசென்ஸ் – 2 துளிகள்

செய்முறை விளக்கம்:

👉 பாதாம்பருப்பை சுடு நீரில் ஊற வைத்து தோல் நீக்கி, நிழலில் உலர வைத்து, பின்னர் வெறும் கடாயில் சூடுபட வறுத்து, ஆறியதும் மிக்ஸியில் போட்டு பொடியாக அரைத்துக் கொள்ள வேண்டும். அத்துடன் சர்க்கரை, குங்குமப்பூ ஆகியவற்றை சேர்த்து பொடி செய்து கொள்ளவும். பிறகு, இந்த பவுடர் கலவையுடன், பாதாம் எசென்ஸ் விட்டு நன்கு கலந்து எடுத்து கொண்டால் பாதம் பவுடர் விற்பனைக்கு தயாராகி விடும். பின்பு இதனை நம் நிறுவனத்தின் பெயர் அச்சிடப்பட்ட பாக்கெட்டுகளிலோ அல்லது பாட்டில்களிலோ அடைத்து விற்பனைக்கு அனுப்பலாம். குறிப்பு: பாதாம் பருப்பை தோல் உரிக்காமல், வெறும் கடாயில் சூடுபட வறுத்து ஆறியதும் மிக்ஸியில் பொடி செய்தால் ஊட்டச்சத்து கூடுதலாக கிடைக்கும்.

பயன்படுத்தும் முறை :

👉 இந்த பவுடரை தேவைப்படும்போது ஒரு கிளாஸ் சூடான பாலில், ஒரு ஸ்பூன் பாதாம் பொடி கலந்து பருகலாம் அல்லது பாலில் பாதாம் மிக்ஸை தேவையான அளவு கலந்து ஃப்ரிட்ஜில் குளிர வைத்தும் கொடுக்கலாம்.

விற்பனை முறைகள் :

👉 இவ்வாறு தயார் செய்த பவுடரை சிறிய பாட்டில் அல்லது கவர்களில் அடைத்து அருகில் உள்ள வீடுகளுக்கும், சிறிய மற்றும் பெரிய கடைகளுக்கும் விற்பனை செய்து இலாபம் அடையலாம்.

வீட்டில் இருந்து கொண்டு சுய தொழில்கள் செய்து அதிக லாபம் பெறுவது எப்படி என்பதை அறிந்து கொள்ள, நித்ரா சுய தொழில்கள் செயலியை உடனே டவுன்லோடு செய்யுங்கள்.

http://bit.ly/2J3ZCgA