சுவர் எகிறி குதித்து வந்து மனைவியோடு உல்லாசம்… கள்ளக்காதலனை கதற கதற கழுத்தறுத்த கணவன்!!

 
*🌏♨🤝சுவர் எகிறி குதித்து வந்து மனைவியோடு உல்லாசம்… கள்ளக்காதலனை கதற கதற கழுத்தறுத்த கணவன்!!*

🌏♨🤝நத்தத்தில் மனைவியுடன் உல்லாசமாக இருந்த கள்ளக்காதலனை கழுத்தை அறுத்து கொன்ற டிரைவர் கைது செய்யப்பட்டார்.

🌏♨🤝திண்டுக்கல் மாவட்டம் நத்தம் காமராஜர் நகரைச் சேர்ந்தவர் பிரபு பெயிண்டர் வேலை பார்த்து வந்தார். இவருக்கும் அதே பகுதியைச் சேர்ந்த சண்முகம் என்பவரது மனைவிக்கும் பழக்கம் ஏற்பட்டுள்ளது. இது நாளடைவில் இது கள்ளக்காதலாக மாறியது. இவர்கள் தனிமையில் சந்தித்து உல்லாசமாக இருந்து வந்துள்ளார். இவர்களின் உல்லாச வி‌ஷயம் சண்முகத்துக்கு தெரிய வந்ததால் ஆத்திரமடைந்தார்.

🌏♨🤝இதனையடுத்து பிரபுவிடம் தனது மனைவியுடன் பழக கூடாது, தனது கள்ளக்காதலை விடும்படி கண்டித்துள்ளார். ஆனால், இதனை மீறி பிரபு சண்முகத்தின் மனைவியுடன் தொடர்ந்து பழகி வந்துள்ளார். சண்முகம் வீட்டில் இல்லாத சமயத்தில் சுவர் எகிறி குதித்து வந்து உல்லாசம் அனுபவித்துவிட்டு சென்றுள்ளார். இவர்களின் உல்லாச வாழ்க்கை நாளுக்கு நாள் எல்லை மீறிப்போனதால் சண்முகத்துக்கு கடும் எரிச்சலை ஏற்படுத்தியது.

🌏♨🤝இந்நிலையில் நேற்று முன்தினம் பிரபு வீட்டில் தூங்கிக் கொண்டு இருந்தார். அப்போது அங்கு சென்ற சண்முகம், பிரபுவின் கழுத்தை ஆட்டை அறுப்பது போல் அறுத்தார். இதில் ரத்த வெள்ளத்தில் துடித்த பிரபு சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். பின்னர் சண்முகம் அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளார். இது குறித்து நத்தம் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீசார் விரைந்து வந்து உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும் சண்முகத்தை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.♨