‘சூப்பர் சிங்கர் 6’ டைட்டிலை தட்டிச்சென்ற செந்தில் கணேஷ்

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான ‘சூப்பர் சிங்கர் 6’ நிகழ்ச்சியின் டைட்டிலை செந்தில் கணேஷ் தட்டிச் சென்றார்.

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகிவரும் நிகழ்ச்சி ‘சூப்பர் சிங்கர்’. சீனியர், ஜூனியர் என இரண்டு பிரிவுகளாக ஒளிபரப்பாகிவரும் இந்த நிகழ்ச்சியின் சீனியர் 6 சீஸனின் இறுதிப்போட்டி, இன்று சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் நடைபெற்றது.

மொத்தம் 22 போட்டியாளர்கள் கலந்துகொண்ட ‘சூப்பர் சிங்கர் 6’ நிகழ்ச்சியில், ஸ்ரீகாந்த், ரக்‌ஷிதா, ஷக்தி, செந்தில் கணேஷ், அனிருத், மாளவிகா ஆகிய 6 பேரும் இறுதிப்போட்டியில் பங்கேற்றனர். இறுதிப்போட்டியில், ஒவ்வொருவரும் இரண்டு பாடல்கள் பாடினர்.

அதில், ‘சூப்பர் சிங்கர் 6’ பட்டத்தை செந்தில் கணேஷ் தட்டிச் சென்றார்.  ரக்‌ஷிதா இரண்டாமிடமும், மாளவிகா மூன்றாமிடமும் பெற்றனர்.

செந்தில் கணேஷுக்கு ரூ.50 லட்சம் மதிப்புள்ள வீடு வழங்கப்படுகிறது. ரக்‌ஷிதாவுக்கு ரூ.25 லட்சம் மதிப்புள்ள நகைகள் பரிசாக வழங்கப்பட்டது.  மாளவிகா ரூ.2 லட்சம் பரிசு பெற்றார்.

Leave a comment

Your email address will not be published.