சென்னை வளசரவாக்கத்தில் வசித்து வந்த பிரபல டிவி நடிகை பிரியங்கா தனாது வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்துக்கொண்டார். கணவருடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக தற்கொலை செய்துக் கொண்டதாக கூறப்படுகிறது.
சென்னை வளசரவாக்கம் காம கோடி நகரில் வசித்தவர் பிரியங்கா(32). புதுக்கோட்டை மாவட்டத்தை சேர்ந்த இவர் சென்னையில் தங்கி டிவி சீரியல்களில் நடித்து வந்தார். வம்சம் என்ற சீரியல் இவர் நடித்து வந்த பிரபலமான சீரியலாகும். பிரபல தனியார் தொலைக்காட்சியிலும் சிலகாலம் முன்பு நடிந்து வந்தார். இவரது கணவர் அருண்பாலா(38). இவர் கூடைப்பந்து பயிற்சியாளர். இருவருக்கும் திருமணமாகி 6 ஆண்டுகள் ஆகிறது.
இதற்கிடையே விவாகரத்துக்கோரி இருவரும் மனு செய்துள்ளனர். இந்நிலையில் தனியாக வசித்துவந்த பிரியங்கா, நேற்றிரவு திடீரென தற்கொலை செய்துக்கொண்டார். தினமும் காலையில் பால்பாக்கெட்டை ஒரு நபர் போட்டுவிட்டுச் செல்வார். அவர் பால் பாக்கெட்டை எடுக்காவிட்டால் பக்கத்து வீட்டில் உள்ளவர்கள் கதவை தட்டி எழுப்பிவிடுவார்களாம்.
இன்றும் அதேபோன்று பால் பாக்கெட்டை எடுக்காமல் இருந்ததால் பக்கத்து வீட்டில் உள்ளவர்கள் கதவை தட்டி எழுப்பியுள்ளனர். ஆனால் நெடுநேரம் கதவை தட்டியும் கதவை திறக்காததால் சந்தேகமடைந்து ஜன்னல் வழியாக பார்த்தபோது பிரியங்கா தூக்கில் தொங்கியுள்ளதை பார்த்து அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
உடனடியாக வளசரவாக்கம் போலீஸாருக்கு தகவல் அளிக்க போலீஸார் உடனடியாக வீட்டுக்கு வந்து கதவை உடைத்து வீட்டுக்குள் சென்றுள்ளனர். அங்கு பிரியங்காவின் உடலை கீழே இறக்கி பரிசோதித்ததில் அவர் ஏற்கனவே உயிரிழந்தது தெரியவந்துள்ளது. இதையடுத்து பிரியங்காவின் உடல் பிரேத பரிசோதனைக்காக ராயபேட்டை அரசு பொதுமருத்துவமனைக்கு அனுப்பப்பட்டது.
பிரியங்கா தற்கொலை குறித்து வளசரவாக்கம் போலீஸார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். அவர் தற்கொலை செய்துக்கொண்டதற்கான காரணம் எதையும் கடிதமாக எழுதி வைக்கவில்லை. கணவருடன் ஏற்பட்ட கருத்துவேறுபாடும், குழந்தை இல்லாத ஏக்கமும் காரணமாக இருக்கலாம் என்று கூறப்படுகிறது. பிரியங்காவின் தற்கொலை குறித்து புதுக்கோட்டையில் உள்ள அவரது உறவினர்கள் மற்றும் கணவர் அருண் பாலாவுக்கு தகவல் அளிக்கப்பட்டுள்ளது.
தனது கணவர் ஏற்பட்ட பிரச்சினை காரணமாக தூக்கிட்டு தற்கொலைபிரபல தமிழ் சீரியல் நடிகை பிரியங்கா தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.
வம்சம் நாடகத்தில் நடித்ததன் மூலம் பிரபலமான சீரியல் நடிகை பிரியங்கா சென்னையில் தனது வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். கணவருடன் ஏற்பட்ட பிரச்னை காரணமாக அவர் தற்கொலை செய்து கொண்டார் என கூறப்படுகிறது. மேலும் அவருக்கு குழுந்தை இல்லாததால் குடும்பாத்தாருடன் ஏற்பட்ட பிரச்னை காரணமாகவும் அவர் தற்கொலை செய்து கொண்டிருக்க வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது.