சென்னையில் பெட்ரோல் விலை இன்று 8 காசுகள் குறைந்து ரூ. 79.16க்கு விற்பனை

சென்னையில் பெட்ரோல் விலை இன்று 8 காசுகள் குறைந்து ரூ. 79.16க்கு விற்பனை செய்யப்படுகிறது.
சென்னை,
பெட்ரோல் மற்றும் டீசல் விலை கடந்த மே மாதத்தில் தினமும் உயர்ந்தபடி இருந்தது. 10 நாட்களுக்குள் பெட்ரோல் விலை லிட்டருக்கு 4 ரூபாய் வரை அதிகரித்து லிட்டருக்கு ரூ.85 வரை விற்பனை செய்யப்பட்டது.  இதனால் வாகன ஓட்டிகள் கடும் அதிருப்தி அடைந்தனர்.
இதனை தொடர்ந்து, பெட்ரோல், டீசல் விலையையும் ஒரே மாதிரியான வரி விதிப்பு முறையான ஜி.எஸ்.டியின் கீழ் கொண்டு வர வேண்டும் என்று பல்வேறு தரப்பில் இருந்து கோரிக்கைகள் விடுக்கப்பட்டன.
மக்கள் மத்தியில் அதிருப்தி அதிகரித்ததால், விலை குறைப்பு நடவடிக்கைகளில் மத்திய அரசு ஈடுபட்டது. அதன்பேரில், இந்திய எண்ணெய் நிறுவனங்கள் ஜூனின் முதல் இரு வாரங்களில் தினமும் பெட்ரோல், டீசல் விலையை குறைத்து வந்தன.
இந்நிலையில், பெட்ரோல், டீசல் மீதான உற்பத்தி வரியை குறைக்கும் வாய்ப்பே இல்லை.  அரசின் உத்தேசத்தின்படி பெட்ரோலிய பொருட்களின் மீது உற்பத்தி வரியில் குறைக்கப்படும் ஒவ்வொரு ரூபாயும் நாட்டுக்கு ரூ.13 ஆயிரம் கோடி வருமானத்தை இழக்க செய்துவிடும் என்று நிதி மந்திரி அருண்ஜெட்லி நேற்று கூறினார்.
இந்த நிலையில், சென்னையில் பெட்ரோல் விலை 8 காசுகள் குறைந்து ரூ. 79.16க்கு விற்பனை செய்யப்படுகிறது.  டீசல் விலையில் மாற்றமின்றி ரூ.71.54க்கு விற்பனையாகிறது.

Leave a comment

Your email address will not be published.