சென்னை கோயம்பேடு அருகே அனைத்து சாலைகளிலும் வாகன நெரிசல்: நெடுஞ்சாலைத்துறை மீது புகார்

சென்னை கோயம்பேடு அருகே அனைத்து சாலைகளிலும் வாகன நெரிசல்: நெடுஞ்சாலைத்துறை மீது புகார்

சென்னை: சென்னை கோயம்பேடு அருகே அனைத்து சாலைகளிலும் வாகன நெரிசல் காரணமாக பொதுமக்கள் அவதி பட்டுவருகின்றனர். சாலைகள் குண்டும், குழியுமாக இருப்பதால் நெரிசல் ஏற்படுவதாக வாகன ஓட்டிகள் புகார் அளித்துள்ளனர். கோயம்பேடு முதல் மதுரவாயல் சாலையை நெடுஞ்சாலைத்துறை சீரமைக்கவில்லை என்று குற்றசாட்டு எழுந்துள்ளது. மதுரவாயல்-துறைமுகம் உயர்மட்ட சாலைப்பணி நிறுத்தப்பட்டதால் 8 ஆண்டுகளாக அவதிப்படுவதாக பொதுமக்கள் வேதனை தெரிவித்துள்ளனர்.🌐